RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Monday, January 4, 2010

காற்றை நிறுத்தி கேளு

படம் : அசல்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : சுனிதா மேனன்

காற்றை நிறுத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..
முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
பகையை வென்று தான் சிரிப்பான்
நண்பரை மன்னிதழுவான்
போனான் என்று ஊர் பேசும்போது
புயல் என வீசுவான்
பூமிபந்தின் ஒரு பக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களிலும்
தோட்டா தேடுவான் !
தோழர்களின் பகைவரையும்
சுட்டே வீழ்த்துவான்
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...

நித்தம் நித்தம் யுத்தம் - இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுகில்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டுச் சிங்கம் போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கமில்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை
சட்டென்று தாண்டுவான்!
தர்மங்களின் கோடுகளைத்
தாண்டிட கூசுவான் !
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...

No comments:

Post a Comment