RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Tuesday, January 5, 2010

சிங்கம் என்றல் எம் தந்தை தான்..

படம்: அசல்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : பரத்வாஜ்


சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..
செல்வம் என்றல்
எம் தந்தை தான்..
கண் தூங்கினால்
துயில் நீங்கினால்
எம் தந்தை தான் !
எம் தந்தை தான் !
எல்லோருக்கும்
அவர் விந்தை தான்!
விண்மீன்கள் கடன் கேட்கும்
அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும்
அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள்
குளம் தாங்குமே!
அவர் பேரை சொன்னாலே
பகை நீங்குமே!
அழியாத உயிர்கொண்ட
எம் தந்தையே
ஆண்வடிவில் நீ என்றும்
எம் அன்னையே

வீரத்தின் மகனென்று
விழி சொல்லுமே!
வேழத்தின் இனமென்று
நடை சொல்லுமே!
நிலையான மனிதன் எனப்
பேர் சொல்லுமே!
நீதானே அசல் என்று
ஊர் சொல்லுமே!
உன் போல சிலரின்று
உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு
நிகராகுமா?

எப்போதும் தோற்காது
உன் சேவைதான்!
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்!
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்!
கடல்தாண்டிப் பொருள் ஈட்டும்
உன் கீர்த்தி தான்!
தலைமுறைகள் கழிந்தாலும்
உன் பேச்சுதான்
தந்தை எனும் மந்திரமே
என் மூச்சுதான்!

சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..

No comments:

Post a Comment