RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Wednesday, August 19, 2009

காற்றில் வரும் கீதமே

படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்
வெற்றிகரமாக நூறாவது பதிவு

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஆ..
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் ஏது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
இப்பாடலின் வீடியோ இங்கே..

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
    அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
    இது பெண்களை உயர்த்த எழுத பட்ட தவறான கருத்து என நான் என் வாழ்க்கையின் கசப்பான, இருண்ட,கொடிய ஆபத்தான,தற்கொலைக்கு வலுகட்டாயமாக தள்ளும் பெண்ணை மனைவியாக பெற்று வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் கருதுகிறேன். ஆதாரம் அன்னையா?, தந்தையா? ஆதி சக்தி என்று அம்மனை வணங்குகிறோம் என்ற அடிப்படையில் ஆதாரம் அன்னை,அவளே கரு சுமக்கிறாள்,அந்த கரு (தனக்கேற்ற) விந்துவை வரவழைத்து உயிரை உருவாக்கியது என்ற கருத்து விளைகிறது. இந்த அடிப்படையில் பார்த்தோம் என்றால் ஆண் உயிரின் விதை,வித்தை தாங்கும் ஆண் பெண்கள் சொல்லும் கருத்தை ஆமோதித்து ஆமாம் போடவேண்டும், வேறு வழி இல்லை, அமோதிக்காவிட்டாலும் பெண்ணே ஜெயிகிறாள் என்று விளைவு ஏற்படுகிறது.இது தற்போதைய நடைமுறையில் நடிபெற்று கொண்டு இருக்கும் தவறான செயல் ஆகும். ஆனால் ஏனோ இந்த தவறான நிலை நடைமுறை படுத்தபடுகிறது.ஆதாரம் அன்னை என்றால் அதற்கேற்ற லயம் தந்தை என்றால் அன்னையே எதையம் தீர்மானிக்கும் சக்தி, எந்த ஒரு செயலுக்கும் அன்னையே ஆதாரம், அன்னையின் எண்ணங்களை,செயல்களை தந்தை சிரமேற்கொண்டு,தான் சேமித்து வைத்து இருக்கும் சக்தியை எல்லாம் உபயோகித்து தாயின் எண்ணங்களை செய்து முடிக்கிறான் என்று பொருள் தருகிறது.
    ஆதாரம் தந்தை, அந்த ஆதாரத்தை தாய் தாங்கி நல்ல உயிரை உருவாக்கினாள் என்று சொன்னால் என்ன பிழை ஏற்படும்? ஆதாரம் தந்தையே என்று நான் கருதுகிறேன்.
    என் பிள்ளைகளை என்னிடம் இருந்து பிரித்து என் தந்தையை தீராத மன உளைச்சலுக்கு உள்ளாக்கி கொன்று, எங்கள் பெற்றோர் கடின உழைப்பால் சேர்த்த பல செல்வங்களை எல்லாம் நிர்மூலம் ஆக்கிய பெண்ணை ஆதாரம் என்றும் அதை செய்து முடிக்கும்(எதிர்த்தாலும் முடியாமல், தடுத்தாலும் முடியாமல், கெஞ்சினாலும் முடியாமல் நொந்து,தற்கொலை முயற்சி மேற்கொண்டு அழிவை தடுக்க முடியாமல் வலுகட்டாயமாக காரணமாக ஆக்கப்பட்ட நிலை) லயம நான் என்றும் பொருள் தந்தால் சரியாக இருக்கும்,இருக்கிறது என்று மக்கள் ஏற்றுகொள்ள விளைவர்.ஆனால் என் ஜீவன்களை, என் மகள்களை என்னிடம் இருந்து பிரித்துக்கொண்டு,என் செல்வங்களை(பணம்,பொருள்) திருடிக்கொண்டு வாழும் பெண் என் குழந்தைகளுக்கு ஆதாரம் என்றால் அதை எப்படி என்னால் ஏற்றுகொள்ள இயலும். என் குழந்தைகள் எனக்கே உரித்தானவை. குழந்தைகள் தந்தையின் சொத்து. தந்தையே முழு உரிமை உள்ளவன். அவனிடம் இருந்து குழந்தைகளை பிரித்து அதற்கு சட்டம், சமுதாயம் போன்றதை ஏமாற்றி துணைக்கு வைத்துகொண்டு பிழைக்கும் பெண்களை யாரும் போற்றகூடாது.. போற்றினால் ஜீவன் மோசமடையும், இயற்கை சீர்கேடு அடையும்.வளம் குன்றும். ஆகவே தந்தையை உயர்த்தி பாடல் எழுதவேண்டும். ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்ற கருத்தின் அடிப்படையில் பாடல் இருக்கிறது.ஆனால் குழந்தைகளை தாய் வளர்க்க கூடாது என்ற நிலையில் மட்டுமே இந்த ஆதாரம் தாய் என்ற கருத்தை எதிர்கிறேன்.நன்றி..

    ReplyDelete