RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Tuesday, August 18, 2009

ஆறும் அது ஆழம் இல்ல

படம் : முதல் வசந்தம்
இசை : இளையராஜா
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)


மாடி வீட்டுக் கன்னி பொண்ணு

மனசுக்குள்ள ரெண்டு கண்ணு

ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா

கண்ணுக்குள்ள மின்னும் மையி

உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி

சொன்ன சொல்லு என்ன ஆச்சு

சொந்தமெல்லாம் எங்கே போச்சு

நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்

திரை போட்டு செஞ்ச மோசமே


ஆறும் அது ஆழம் இல்ல...


தண்ணியில கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து

ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு

ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு

அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா

ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது

அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

ஆறும் அது ஆழம் இல்ல...

இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment