RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Monday, August 17, 2009

தெய்வம் தந்த வீடு

படம்: அவள் ஒரு தொடர் கதை
இசை: M.S. விஸ்வநாதன்
பாடியவர் : கே. ஜே. ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெய்வம் தந்த வீடு...

No comments:

Post a Comment