RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Tuesday, August 18, 2009

இரவா பகலா குளிரா வெயிலா

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: பழனி பாரதி
விரும்பி கேட்டவர்: அர்ச்சனா.N.M

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை எதோ செய்யுதடி, காதல் இதுதானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

இரவா பகலா குளிரா வெயிலா..

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

இரவா பகலா குளிரா வெயிலா..

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட

சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ளே உன்னை அணைப்பேன்

இரவா பகலா குளிரா வெயிலா...
இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment