RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Wednesday, August 12, 2009

அழகு நிலவு..

அழகு நிலவு கதவை திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே

ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததாலே நானும் உன் தாயே..

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மைதான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது

அன்புதான் தியாகமே
அழுகைதான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே..

பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே

உலகம்தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம், எந்தன் கண்ணீர் துளி ஒண்றே..!

No comments:

Post a Comment